சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

unnamed (8)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகரில் கடந்த 6 வருடங்களாக கண் பரிசோதனை மற்றும் கண் சம்மந்தமாக பொது மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சிறந்த முறையில் வழங்கிவரும் சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின்ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் 29-12-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மதியம் வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

முற்றிலும் இலவசமாக இடம்பெற்ற இவ் இலவச கண் பரிசோதனை முகாமில் கண் நோயுள்ள மாணவ மாணவிகள் ,சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தமது கண்களை இலவசமாக பரிசோதனை செய்தனர்.

சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சமீல் தலைமையில் இடம்பெற்ற இவ் இலவச கண் பரிசோதனை முகாமில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் காத்தான்குடிக் கிளை முகாமையாளர் செட்.எம்.சஜி ,கண் பரிசோதகர்களான விஜயசேன, பெரேரா, நிஸ்கி,சமீரா,சமீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் பரிசோதனை முகாமில் 250 பேர் கண்களை பரிசோதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

One response to “சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்”

  1. முடிவில கண்ணாடி குடுத்தாங்களா???
    இல்ல கடைக்கு வந்து காச கட்டி கண்ணாடி வாங்குங்க எண்டு துண்டு குடுத்தாங்களா???

Leave a reply to Hidden KKY Cancel reply