மட்டக்களப்பு: யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பிரதான கிளைக் காரியாலயம் 28-12-2013 இன்று சனிக்கிழமை காலை இலக்கம்.16, தாமரைக்கேணி வீதி அரசடி, மட்டக்களப்பு எனும் முகவரியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ஆனந்த ஜெயபால உட்பட மதப் பெரியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இவ் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரனுக்கான நியமனக்கடிதத்தினை அதன் தேசிய அமைப்பாளர் கையளித்ததுடன் யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் விபரங்களும் கையளிக்கப்பட்டன.
இந்த பிராந்திய காரியாலயத்தில் இன்று தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுமென ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
இங்கு மதப் பெரியார்களின் ஆசி உரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment