மூதூர்: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், கிழக்கு மாகாண சமமான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், மூதூர் வேதத்தீவு மீள் குடியேற்ற கிராமத்தில் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 2013.12.29 ஆந் திகதி மக்களிடம் கையளிக்கவுள்ளார்.
வேதத்தீவு மீள்குடியேற்ற மாதிரி கிராமத்தில் 11 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் மக்களிடம் கையளித்தல், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 14.11 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட சஜாத் வீதி மக்களிடம் கையளித்தல், 8.5மில்லியன் ரூபா நிதியில் வேதத்தீவு கிராமத்திற்கான மின்வழங்கல் திட்டம் ஆரம்பிக்கும் நிகழ்வு, வேதத்தீவு கிராம மக்களுக்காக 2.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவி வழங்கல், உள்ளுராட்சி திணைக்களமும், வீதி அபிவிருத்தி அமைச்சும் இணைந்து 1.6 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் கிணறுகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தினால் 2 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட வேதத்தீவு கிராம உள்ளக வீதிகள் மக்களிடம் கையயளித்தல், மூதூர் – வேதத்தீவு கிராமத்திற்கான புதிய போக்குவரத்து சேவை ஆரம்பித்தல், வேதத்தீவு கிராமத்திற்கான பாலர் பாடசாலை ஆரம்பிக்கும் நிகழ்வு போன்ற அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளித்து அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெறும்.
இந் நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் AHM. அன்ஸார், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் இணைப்பாளர் Dr. YSM. சியா, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் AM. ஹரீஸ், மூதூர் பிரதேச செயலாளர் N.பிரதீபன் உட்பட மத்திய மாகாண அரச உயரதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Published by

Leave a comment