புதிய காத்தான்குடியில் வீடொன்றின் மீது கல் வீச்சு தாக்குதல்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் வீடொன்றின் மீது நடாத்தப்பட்டுள்ள கல் வீச்சு தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. காத்தான்குடி பொலிஸ் பிரிவின் புதிய காத்தான்குடி 1ம் குறிச்சி முஅத்தினார் வீதியிலுள்ள வீடொன்றின் மீது வெள்ளிக்கிழமை (27.12.2013)அதிகாலை இந்த கல் வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இதனால் குறித்த வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் இடம் பெற்ற போது வீட்டினுல் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் தூக்கத்தில் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

unnamed (1)

Published by

Leave a comment