பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு காத்தான்குடியில்…..

-டீன்பைரூஸ்-

OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி: பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின்  அங்குரார்ப்பண நிகழ்வு (27.12.2013 வெள்ளிக்கிழமை) அஷ் ஷஹீட் அஹ்மத் லெப்பை ஞாபகார்த்த மண்டபம் (காத்தான்குடி சம்மேளன காரியாலயத்தின் மேல்மாடி) இல் அஷ் ஷெய்ஹ். MSM நுஸ்ரி (நழீமி) தலைமையில் நடை பெற்றது.

பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் பணிப்பாளர் அஷ் ஷெய்ஹ். MSM நுஸ்ரி (நழீமி) தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மெளலவி MI அப்துல் கபுர்(நழீமி) BA (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் இஸ்லாம்) அவா்களும், கௌரவ அதிதியாக அஷ் ஷெய்ஹ் MBM பிர்தௌஸ்(நழீமி) BA (தவிசாளர்,பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை,பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை,பிஸ்மி பாலர் பாடசாலை) அவா்களும் விசேட அதிதிகளாக விடி வெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியா் MBM.பைரூஸ், காத்தான்குடி சம்மேளனத்தின் தலைவர் அலஹாஜ் M காலித் JP உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகா்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தரம் ஆறு தொடக்கம் பத்ததாம் ஆண்டு வரையான மாணவா்களுக்கு என புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் கல்வித் திட்டமானது எதிர் கால மாணவ சமூகத்திற்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் என புத்தி ஜீவிகள் தெரிவித்தனர்.

மேற்படி நிகழ்வின் போது பிரதம மற்றும் கௌரவ அதிதிகளின் விசேட உரையும் இடம் பெற்றது.OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment