அபுதாபி: நேற்றிரவு அபுதாபியில் இடம்பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கிடையிலான 5வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை 2 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கைக்கு ஓர் ஆறுதல் வெற்றி கிடைத்திருக்கின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரை பாகிஸ்தான் 3:2 எனும் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டி நாயகனாக டினேஷ் சண்டிமல் தெரிவானார். இறுதிவரை வெற்றிக்கு துணைபுரிந்த சந்திமல், ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு வழிசமைத்தார்.
தொடர் நாயகனாக பாகிஸ்தான் அணியின் முகம்மட் ஹபீஸ் தெரிவானார்.
பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 31ம் திகதி அபுதாபி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Published by

Leave a comment