சம்மாந்துறை: இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து சாதாரண கட்டணத்தில் சேவையில் ஈடுபடும் சம்மாந்துறை பஸ் டிப்போவுக்குச் சொந்தமான கொழும்பு-சம்மாந்துறை இரவு நேர அரை சொகுசு பஸ் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்துமாறு இலங்கை போக்குரத்து சபையின் சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் யூசுப் லெப்பை முஹம்மட் தாஸிம் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் நஸீர் , கிழக்குப் பிராந்திய செயலாற்று முகாமையாளர் கனகசுந்தரம் ஆகியோரின் முயற்சியின் பயனாக இப் பஸ் சேவை சுமார் 1 மாதமாக சேவையில் ஈடுபடுவதாகவும் கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கும் – சம்மாந்துறையில் இருந்து கொழும்புக்கும் -சாதாரண கட்டணமாக ரூபாய் 450 ரூபாய் மட்டுமே அறவிடப்படுவதாகவும் சம்மாந்துறைக்கும் – கொழும்புக்கும் மிகவும் குறுகிய நேரத்தில் சென்றடைவதற்கு இப் பஸ் சேவை பெரிதும் உதவுவதாகவும்; சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் யூசுப் லெப்பை முஹம்மட் தாஸிம் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்
குறித்த பஸ் சேவை தினமும் இரவு 8.00 மணிக்கு சம்மாந்துறை பஸ் டிப்போவிலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்தை சென்றடைவதாகவும் – கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சம்மாந்துறை பஸ் டிப்போவை வந்தடைவதாகவும் கொழும்பில் இருந்து கல்முனை ,சம்மாந்துறை வரும் பொது மக்களின் நலன் கருதி சாதாரண கட்டணத்தில் இப் பஸ் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு-காத்தான்குடி,கல்முனை,சம்மாந்துறை ஆகிய தூர இடங்களுக்கு செல்லும் பிரயாணிகளும் சம்மாந்துறையிலிருந்து கொழும்பு-குருநாகல்,நிட்டம்புவ உள்ளிட்ட தூர இடங்களுக்கு செல்லும் பிரயாணிகளும் ஆசனங்களை பதிவு செய்ய வேண்டுமானால் சம்மாந்துறை பஸ் டிப்போ -0672260281, சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் 0771058320 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய ஆசனங்களை பதிவு செய்ய முடியும் எனவும் சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் யூசுப் லெப்பை முஹம்மட் தாஸிம் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த பஸ் சேவையில் சம்மாந்துறை ,காரைதீவு,சாய்ந்தமருது,கல்முனை,மருதமுனை,கல்லாறு, பெரியகல்லாறு,ஓந்தாச்சிமடம்,செட்டிபாளயம்,களுவாஞ்சிக்குடி, கிரான்குளம் ஆரையம்பதி ,காத்தான்குடி ,மட்டக்களப்பு, ஏறாவூர்,செங்கலடி ,ஓட்டமாவடி ,வாழைச்சேனை,ரிதிதென்னை,புனானை,வெலிகந்தை ,செவணப்பிடிய ,மண்ணம்பிட்டிய பொலனறுவை,ஹபறனை,தம்புள்ளை,கலேவல ,மெல்சிறிபுர இப்பாகமுக,குருநாகல்,பொதுஹர,பொல்கஹவல,அளவ்வ,வரகாபொல,நிட்டம்புவ,கடவத்தை,கிரபத்கொடை ,கொழும்பு போன்ற இடங்களுக்கு செல்லும் பிரயாணிகள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment