கொழும்பு: 1800 கிராம் எடை கொண்ட 18 தங்க பிஸ் கட்டுகளை குத வழியாக மறைத்து துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவரை சுங்க பிரிவினர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில் துபாயிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ¤க்கு சொந்தமான விமானத்தில் வந்திறங்கிய 48 வயதான திருகோணமலை வாசி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய போதை ஒழிப்பு பிரிவினர் (நாகொடிக்) நடத்திய திடீர் சோதனையின் போது தங்க பிஸ்கட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
நியூசிலாந்தில் தயாரிக்கப்பட்ட 24 கரட் தங்க பிஸ்கட்டுகள் 1800 கிராம் எடைகொண்டவை என்றும் குதவழியூடாக தங்கம் கடத்தி வந்த சம்பவங்களுடன் ஒப்பிடும் போது இதுவே ஆகக் கூடிய தொகை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து கொடுத்தால் அவருக்கு ஒரு இலட்ச ரூபா தருவதாக கூறியே அவரி டம் தங்க பிஸ்கட்டுகள் ஒப்படைக் கப்பட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சுங்க பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.TK
Leave a comment