சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொலிசாரின் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

police– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழிப்;பேரலை சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரனசிங்க தலைமையில் 26-12-2013 இன்று  வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இதன் போது 2004ம் ஆண்டு 12 மாதம் 26 திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரழிவின் போது உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வேண்டுகோளுக்கமைவாக இன்று காலை 09.25 முதல் 09.27மணி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றதற்கமைவாக காத்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால்; இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய உயரதிகாரிகள்; ,மோட்டார் போக்குவரத்து பொலிசார் உட்பட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

police

police

Published by

Leave a comment