ஏறாவுரில் கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டு

robber– பழுலுல்லாஹ் பர்ஹான்

ஏறாவூர்: ஏறாவூர் நகர கடைத் தெருவில் உள்ள கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள பல சரக்குக் கடை ஒன்றிலேயே நேற்று புதன்கிழமை (26)  நள்ளிரவு இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

இந்தக் கடையிலிருந்து  கையடக்கத் தொலைபேசிகளுக்கான மீள்நிரப்பு அட்டைகள்;, சிகரெட்டுக்கள், பணம் ஆகியனவே திருட்டுப் போயுள்ளன.

150,000 ரூபா பெறுமதியான  மீள்நிரப்பு அட்டைகளும் 300,000 ரூபா  பெறுமதியான சிகரெட்டுக்களும் 100,000 ரூபா பணம் ஆகியனவே திருட்டுப் போயுள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையின் கூரையை அகற்றி விட்டு அதன் ஊடாக உள்நுளைந்து சென்றே இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

திருட்டு இடம்பெற்றுள்ள கடைக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸார் இந்த திருட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment