சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஜக் கலிஸ் ஓய்வு

kallis– SHM

ஜொஹன்ஸ்பேர்க்: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஜக் கலிஸ், டர்பனில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

38 வயதாகும் ஜக் கலீஸ் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். சகலதுறை ஆட்டக்காரரான கலீஸின் இந்த ஓய்வு முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது ஓய்வு குறித்து கலீஸ் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

‘இது எளிதான முடிவு அல்ல. இருப்பினும் ஓய்வு பெற இது சரியான நேரம் என நான் கருதுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 1995-ல் இங்கிலாந்துக்கு எதிரான டர்பன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கலீஸ், 18 ஆண்டுகளாக 165 டெஸ்ட் போட்டிகளில் 44 சதங்கள் உட்பட 13,714 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதேபோல்,  292 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் .

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள், அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளார் கலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
kallis

Published by

Leave a comment