விளையாட்டுத்துறை தற்போது ஆர்வம் குறைந்து காணப்படுகிறது இதனை ஊக்குவிக்க அனைவரும் பாடுபடவேண்டும்-ஹிஸ்புல்லாஹ்

sports– எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: விளையாட்டுத்துறை தற்போது ஆர்வம் குறைந்து காணப்படுகிறது இதனை ஊக்குவிக்க அனைவரும் பாடுபடவேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.ஏம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது இதன்போதே மேற்படி அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளை நன்றாக படி என கூறுகிறோமே தவிர உடற் பயிற்சி தொடர்பாகவோ பிள்ளைகளின் உள நலன் தொடர்பான விடயங்களில் கவனயீனமாக இருந்து விடுகிறோம் பிள்ளை நல்ல பெறுபேற்றினை பெற்றபோதிலும் உடநலக்குறைவாக உள்ளதை அவதானிக்கமுடிகிறது.

தற்போதுள்ள நவீன காலத்துடன் ஒப்பிடும்போது பெண்கள் தங்களது வேலைகளை இருந்த இருப்பிலேயே செய்து முடிக்கின்றனர் அனைத்தும் இயந்திரமாகிவிட்டது. ஆடை கழுவுதல் தேங்காய் துருவுதல் முதற்கொண்டு அனைத்து செயற்பாடுகளும் தங்களின் உடல் நோகாமல் செய்கின்றனர் இதனால் சீனி கொலஸ்ட்ரோல் போன்ற நோய்கள் ஏற்படுகிறது எமது பெண்கள் உடற் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் அண்மையில் பெண்கள் பாடசாலை ஒன்றுக்கு ஆரம்ப வேளைக்குச் சென்றிருந்தேன் அனேகமான மாணவர்கள் ஆட்டோவிலேயே வந்திறங்கினர் அப்பிள்ளைகளை விசாரித்தபோது வீடுகள்  மிக அண்மையில் இருப்பதாக தெரிவித்தனர் ஆனால் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல மைல்களுக்கு அப்பால் இருந்து பாடசாலைக்கு நடந்து வருவதை காணலாம்.

விளையாட்டில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் வேலையில்லாதவர்களே விளையாடுகின்றனர் இந்நிலை மாற வேண்டும் வேலைப்பழு உள்ளவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டவேண்டும் அதி உத்தம ஐனாதிபதி மகிந்த ராஐபக்’ அவர்கள் விளையாட்டுத்துறையை ஊக்குவித்து ஒரு திடகாத்திரமான சமுதாயம் ஒன்றினை கட்டியெழுப்ப வேண்டும் என அடிக்கடி கூறுவார்கள்.

எனவே  விளையாட்டுத் துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் நாம் நோயற்ற சமூகமாக மாறவேண்டும் எனத்தெரிவித்தார்

மேற்படி நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர் கே கருணாகரன் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் கலந்து சிறப்;பித்தனர்.  

Published by

Leave a comment