திவிநெகும திட்டத்தினூடாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

D.N.5[1]– ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா பிரதேச செயலாளர் சீ.கிரிஸ்நேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 17 கிரமா சேவகர் பிரிவுகளிலுள்ள மக்களின் வாழ்வாதார தேவையினை கருத்திற் கொண்டு திவிநெகும திட்டத்தினூடாக மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மற்றுமொரு வேலைத்திட்டமாக 17 கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கான மரக்கன்றுகள் மா, பலா, தென்னை இன்னும் பலவகையான மரக்கன்றுகள் திவிநெகும திட்டத்தினூடாக கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் பிரதேச செயலாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வுக்கு ஏராளமான மக்கள் வருகை தந்தோடு மரக்கன்றுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

D.N.1[1]

D.N.5[1]

Published by

Leave a comment