செயற்கைக் கருத்தரிப்பு: 60 வயது சீனப்பெண்ணுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள்

mother[1]– SHM

பீஜிங்: விபத்தில் 29 வயது மகளைப் பறி கொடுத்த சீனப்  பெண் ஒருவருக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. சீனாவை சேர்ந்த 60 வயதுப் பெண் ஷெங்ஹைலின். கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த விஷவாயு தாக்குதலில் இவரது ஒரே மகள் மரணம் அடைந்தார்.

அப்போது அப்பெண்ணுக்கு வயது 29. சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமுலில் உள்ளதால் ஷெங்ஹைலினுக்கு ஒரு மகள் மட்டுமே இருந்தாள். விபத்தில் அவளும் பலியானதால் வயதான காலத்தில் தனிமையில் தவித்தார் ஷெங்ஹைலின்.

எனவே, அவர் வயது முதிர்ந்த காலத்தில் மீண்டும் குழந்தை பெற முடிவு செய்தார். அதற்காக மருத்துவமனையை நாடிய ஷெங்ஹைலின் செயற்கை முறையில் கருத்தரித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகளை பிறந்துள்ளது. இதன் மூலம், . உலகிலேயே அதிக வயதான பிறகு குழந்தை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை ஷெங்ஹைலின் பெற்றுள்ளார்.

பொதுவாக குழந்தையின் நலன் கருதி வயது முதிர்ந்த பெண்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை முறையை மேற்கொள்ளப் படுவதில்லை. ஆனால் தனிமை நிலையை கருத்தில் கொண்டு ஷெங்ஹைலினுக்கு சிகிச்சை மூலம் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment