கிண்ணியாவில் PMGG தலைமையிலான அரசியற் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம்

asmin– PMGG ஊடகப்பிரிவு

கிண்ணியா:  கிண்ணியாவில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியற் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று மாலை கிண்ணியா பொது மைதானத்தில் இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியற் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு (FJP) “விதை ஒன்று விருட்சமாகும் நாள்” எனும் தலைப்பிலான மேற்படி பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

FJPயின் உறுப்பினர் முஹம்மது இர்ஷாத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் (இஸ்லாஹி), PMGGயின் மூதூர் செயற்குழு உறுப்பினர் Dr. KM.ஸாஹிர், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியற் கூட்டமைப்பு சார்பிலான வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி) மற்றும் PMGGயின் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.

மேற்படி கூட்டத்தில் கல்வி மான்கள், உலமாக்கள், நலன்விரும்பிகள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

rahuman

asmin

???????????????????????????????

Published by

Leave a comment