ஆங்கிலயர்களின் பார்வையில் ‘கிறிஸ்மஸ்’

family-celebrating-christmas-pic-getty-images-520954705-99257[1]– MJ

லண்டன்: நத்தார் பெருநாள் இன்று (25) உலகில் வாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுவது என்பதை விட உலக மக்களில் அதிகமானவர்களால் கொண்டாடப்படுகிறது என்றே கூறமுடியும்.

உலகில் அதிகளவான பிரதேசங்களில் வருடத்தின் இறுதிமாதமான டிசம்பர் மாதமானது, குளிர், மழை போன்ற காலநிலையில் மூழ்கியிருக்கும்.

இலங்கை உட்பட குறிப்பாக தெற்காசிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள், மத நம்பிக்கையில் இந்நத்தார் தினத்தைக் கொண்டாடுகின்ற போதிலும், மேற்கத்தேயர்களும், ஏனைய நாட்டவர்களும் ஓர் பண்டிகையாகவே இந்த நத்தார் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

சுயநல வாழ்க்கையில், மதசார்பற்று வாழும் ஆங்கிலேயர்களுக்கு இத்தினம் ஓர் பிரதான பண்டிகையாக கருதப்படுவதுடன், பொது விடுமுறையாகவும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தினமாகவும் அமைகின்றனது.

குறிப்பாக ஐரோப்பாவில் குளிர்காலத்தில் அணியும் ஆடைகளை தெற்காசியாவில் இருக்கும் மக்கள் மதரீதியான ஆடையென நினைத்து அணிந்து வருவதும் ஓர் வேடிக்கை.

எனினும், இயேசு பிறந்த இத்தினம் என கிறிஸ்தவர்கள் நம்பி, அதனை கொண்டாடுகின்ற போதிலும், 90 வீதத்துக்கும் அதிகமான ஆங்கிலேயர்கள் இத்தினத்தை மதசார்பான தினமாக அணுஷ்டிப்பதில்லை. மாறாக ஓர் விடுமுறை தினம் போலவே கொண்டாடுவதுடன், சுயநல வாழ்க்கையில் வருடமெல்லாம் உழைத்து பிரிந்து வாழ்ந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து, சமைத்துண்டு மகிழும் ஓர் பெருநாளாகவே இதனைக் கருதுகின்றனர்.

christmas_party_london_bg_tllon_en[1]

கிறிஸ்மஸ் தினத்தில் மாத்திரம் வருடமெல்லாம் இழுத்து மூடப்பட்டிருந்த தேவாலயங்கள் திறக்கப்பட்டாலும், எந்தவொரு வெள்ளையர்களையும் காண முடியாத துர்பாபக்கிய நிலைக்கு இயேசு பிறந்த தினம் அங்கு கொண்டாடப்படுகிறது. தெற்காசிய நாட்டவர்களும், கறுப்பினத்தவர்களில் சிலருமே தேவாலயங்களுக்குச் சென்று அன்றைய ஆராதணைகளைச் செய்த போதிலும், வெள்ளைக்காரர்களை காணமுடியாது.

காலை ஆராதணை தலைநகர் லண்டன், போல், கதரல் தேவாலயங்களில் இடம்பெறும். இந்நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக அதிகளவான பிரமுகர்கள் கலந்து கொள்வதுடன், உள்ளுர் பிரமுகர்கள், பொது நிறுவனங்களால் அழைக்கப்பட்டிருப்பின் அன்றைய ஆராதணைகளில் பெயரளவில் கலந்து கொண்டு திரும்பி விடுவர்.

girl_1551514c[1]

இரவு முழுக்கு ஆபாசங்களிலும், மது போதையிலும் லயித்திருக்கும் ஆங்கிலேயர்கள், இயேசு பிறந்த தினத்திலும் குடித்து, கும்மாளமடித்து, தன் ஆடைகள் களைந்து விழும் அளவுக்கு வீதிகளில் மதிமயங்கி விழுந்து கிடப்பதையும் ஆங்காங்கே காண முடியும்.

பிரதான உணவாக  வான்கோழி  சமைக்கப்படுவதுடன், மதுபானங்கள் மிக முக்கிய பானமாகப் பறிமாறப்பட்டு என்றுமில்லாதவாறு அருந்தப்படும்.

இனிப்புக்களும், கேக் வகைகளும் பரிமாறப்படும். வருடத்தில் ஒரு முறை குடும்பங்களுக்கிடையில் பரிமாறப்படும் வாழ்துக்களும், அன்பளிப்புக்களும் அன்றைய தினம் உடைத்துப் பார்த்து மகிழும் தினம்.

family-celebrating-christmas-pic-getty-images-520954705-99257[1]

ஓர் காலத்தில் 90 வீதம் கிறிஸ்தவ மத நாடாக இருந்த இங்கிலாந்து தற்பொழுது மதசார்பற்ற நாடாக மாறிவருவதுடன், பல தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டிருப்பதுடன், அவைகளில் சில பள்ளவாயல்களாகவும் மாறிவருவதும் அவதானிக்கத்தக்கது.

வத்திக்கானில் பல இலட்சக்கணக்கான மக்கள் இன்றைய ஆராதணையில் ஈடுபடவிருப்பதும் ஓர் விசேட அம்சம். பிரித்தானியாவைப் பொருத்தமட்டில், ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் இன்றும் மத சார்பாக கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டாலும், இளம் சமுதாயத்தினர் ஆராதனைகளை தவிர்த்து வருகின்றனர்.

எனவே, ஆங்கிலேயர்களைப் பொருத்தமட்டில் கிறிஸ்மஸ் ஓர் மத ரீதியான பண்டிகையல்லாமல், மாறாக வருடத்தில் ஓர் முறைவரும் பெருநாளாகவே கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s