காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 11 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 3 விளையாட்டு கழகங்கள் மற்றும் 1 இளைஞர் கழகம்,1சமூக நிறுவனம் , 1ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்பளிப்பு செய்யப்பட்ட 11 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உட்பட மற்றைய உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 23-12-2013 நேற்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது விளையாட்டு கழகங்கள் மற்றும் இளைஞர் கழகம் ,சமூக நிறுவனம் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் அதன் தலைவர்களிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கருநாகரன் ,’லங்கா ஹிறா பௌண்டேசன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்களான குறைஷ்,கரீம், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் ,விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by
![1-DSC08066[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/12/1-dsc080661.jpg?w=150&h=112)


Leave a comment