அல்-முகர்ரமா பாலர் பாடசாலை பிரியாவிடை நிகழ்வில் PMGG உறுப்பினர்கள் பங்கேற்பு

pmgg– PMGG ஊடகப்பிரிவு

 மூதூர்: மூதூர், நெய்தல் நகர் அல்-முகர்ரமா பாலர் பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும் பாலர்களின் கலை நிகழ்ச்சியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 22.12.2013 மாலை மூதூர், அல்-ஹிலால் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

அல்-முகர்ரமா பாலர் பாடசாலையின் பொறுப்பாளர் AC.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைத்தார்.

அத்துடன் மூதூர் உதவிக் கல்விப் பணிப்பாளர் A.உதயகுமார், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), அதன் மூதூர் செயற்குழு உறுப்பினர் Dr. KM.ஸாஹிர், J.ஜஹார் (ISA வலயக்கல்வி அலுவலகம், மூதூர்) உட்பட அதிதிகள், PMGGயின் காத்தான்குடி மற்றும் மூதூர் செயற்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளுக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அனுசரணை வழங்கியிருந்தது.

???????????????????????????????

pmgg

Published by

Leave a comment