க. பொ. த. (உ/த) பரீட்சை மீள் திருத்தத்திற்கு ஜனவரி 20க்கு முன் விண்ணப்பிக்கலாம்

Examகொழும்பு: இந்த வருடம் வெளி யாகியுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தத்திற்கு உட்படுத்த விரும்பும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் பூரணப் படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபரின் கையொப்பத்துடனும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பத்திரிகைகளில் இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிவுறுத்தல்களுக் கமையவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இது குறித்த மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கூடாகவோ அல்லது 0112784208 அல்லது 0112784537 அல்லது 0113188350 அல்லது 0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு தமது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார். இம்முறை க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு சுமார் மூன்று

இலட்சம் மாணவர்கள் சமுகமளித்திருந்தனர். இவர்களுள் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 மாணவர்கள் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.

Published by

Leave a comment