ஈரான் கடற்படை வீரர் மீது கொழும்பில் கல்வீச்சு தாக்குதல்

harbourகொழும்பு: ஈரான் கடற்படை வீரர் ஒருவர் கல் வீச்சு தாக்கு தலுக்கு உள்ளாகி காய மடைந்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் நான்காவது நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகே நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கல்வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த ஈரான் கடற்படை வீரர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்வீச்சை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் ஒரு மன நோயாளி என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நல்லெண்ண விஜயத்தை மேற் கொண்டு ஈரான் நாட்டிற்குச் சொந்தமான இரண்டு போர் கப்பல்களும் நீர் மூழ்கி கப்பல் ஒன்றும் கடந்த வெள்ளிக் கிழமை இலங்கை வந்தது. கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்த கப்பல்கள் இன்று முதல் நாட்டில் தரித்து நிற்கவுள்ளது.

இந்நிலையில், இந்தக் கப்பலில் வருகை தந்த அதிகாரியான ஈரான் கடற்படை வீரர் ஒருவர் கொழும்பு நகரை பார்வையிடும் பொருட்டு துறைமுக நுழைவாயில் ஊடாக வெளியில் வந்துள்ளார்.

இதன்போதே எதிர்பாராத விதத்தில் இந்தக் கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.tk

Published by

Leave a comment