வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு

student award– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி இளந்தளிர் கல்வியகத்தில் விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளில் கல்விகற்று 2013ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கத் தோற்றி வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் ,பரிசளிப்பு வைபவமும் 21-12-2013 இன்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி இளந்தளிர் நற்பணிமன்றத்தின் தலைவர் ஆதம் அலி இர்சாத் முஹம்மட் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டதோடு விஷேட அதிதியாக  பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ,காத்தான்குடி இலங்கை மின்சார சபையின் அத்தியட்சகர் நௌபல்,இளந்தளிர் நற்பணிமன்றத்தின் தலைவர் செயலாளர்,பொருளாளர் ஏ.பி.எம்.ஜலால்தீன் உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர்சர்ஜூன்   எம்.பி.பி.எஸ்.,தென்கிழக்குபல்கலைக் கழக பொறியியல் பீட விரிவுரையாளரும்; இளந்தளிர் நற்பணிமன்றத்தின் செயலாளருமான பொறியியலாளர் ஏ.எல்.எம்.றிஸாத் ,தென்கிழக்குபல்கலைக்கழகமுகாமைத்துவ பீடமாணவனும் இளந்தளிர் நற்பணிமன்றத்தின் உப செயலாளருமான எம்.ஜே.எம். பாஸித், மட்- அல்அமீன் மகாவித்தியாலயத்தின் சிரேஷ்ட ஆசிரியரும் இளந்தளிர் நற்பணிமன்றத்தின் உப தலைவருமான சப்ரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர் ஐ.டி. பாட ஆசிரியர ஸரீக்; ஆகியோர் வௌ;வேறு தலைப்புக்களில் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இதன் போது 2013ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கத் தோற்றி வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் அதிதிகளினால் பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
இளந்தளிர் கல்வியகத்தில் இருந்து மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்.

ஏ.எஸ்.எப்.சுமைலா 2 ஏ.பி.
ஏ.எல்.எப்.மாஹிறா 2 ஏ.பி.
ஏ.எல்.எப்.ஸிம்றா 2 ஏ.பி.  
ஏஸ்.எம்.  இஹ்றான் 2 ஏ .பி.
ஏ.எஸ்.எம்.சப்றான் சப்றான் 2ஏ பி.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment