CCDF பாலர் பாடசாலை மாணவர்களின் Going Down 2013

unnamed (9)PMGG ஊடகப்பிரிவு

மூதூர்: கரையோரப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (CCDF) கீழ் இயங்கும் பாலர் பாடசாலை மாணவர்களின் Going Down 2013 சிறுவர் விளையாட்டு விழா நேற்று இரண்டு கட்டங்களாக மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றன.

எழு பாலர் பாடசாலைகளின் ஒருங்கினைவில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல் கட்டம் காலை 8.30 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் கட்டம் மாலை 3.30 மணியிலிருந்து மாலை 6.30 வரையிலும் நடைபெற்றது.

CCDF Pre-School இன் நிருவாக இயக்குனர் MBM. நளீம் (நத்வி) (POIC) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி), நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பிலான வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி), PMGG யின் சூறாசபை உறுப்பினர்களான பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், வித்யாகீர்த்தி MM. அமீர் அலி ஆசிரியர், SMM. பஸீர் ஆசிரியர், PMGG யின் மூதூர் செயற்குழு உறுப்பினர் Dr.M. ஸாஹிர், நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் உறுப்பினர் சகோ. முஹம்மது ஸறூக், PMGG யின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர் ASM. ஹில்மி உட்பட PMGG யின் மூதூர் செயற்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாலர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

அத்துடன் அதிதிகளால் பாலர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி பாலர்களின் நிகழ்வுகளுக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment