தென் மாகாணசபைத் தேர்தலில் குதிக்கவுள்ள நடிகைகள்

nadeeshaM-16

கொழும்பு: தெலுங்கு நடிகை நதீஷா ஹேமமாலி  அரசியலில் குதித்துள்ளார். எதிர்க்கட்சியான  ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்து தென்மாகாண சபை தேர்தலிலும் போட்டியிடுகிறார்  சிங்கள சினிமா நடிகையான நதீஷா ஹேமமாலி,  டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் மிஸ்டர் ராஸ்கல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தமிழ் சினிமாவின் ஆர்.வி. உதயகுமார்தான் இயக்கி இருந்தார் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியானது.

அரசியலில் ஈடுபடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நதீஷா,

‘அரசியல் எனக்கு புதிதல்ல. எனது குடும்பத்தினர் நீண்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் வழியில் நானும் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்’ என்றார்.

nadeesha
நதீஷா ஹேமமாலி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் நடிகைகள் அனார்கலி, கீதா குமாரசிங்கே ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

உபேக்ஷா சுவர்னாமாலி என்ற நடிகை ஆளும் கட்சியில் எம்.பி. ஆக உள்ளார். அவர்களின் கவர்ச்சி போட்டியையும், பிரசாரத்தையும் முறியடிக்கவே நடிகை நதீஷா ஹேமமாலியை தேசிய கட்சி களம் இறக்குகிறது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment