தலைமன்னாரில் இலவச மருத்து முகாம்! றிப்கான் பதியூதீன் ஆரம்பித்து வைத்தார்

unnamedமன்னார் அம்பி

மன்னார்: லங்கா ஜமாத்தே இஸ்லாம்’ அமைப்பின் தலைமன்னார் பியர் கிளையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று (22.12.2013) இடம் பெற்றது. தலைமன்னார் பகுதியில் வசிக்கும் மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு மேற்படி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

சிராஜ் சர்ட்டி இன்டர்நஷனல் ஸ்தாபனத்தின் அணுசரணையுடன் ஜமாத்தே இஸ்லாம் அமைப்பின் தலைமன்னார் பியர் கிளை ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை வடமாகாண சபையின் உறுப்பினரும் பிரதம கொறடாவுமான றிப்கான் பதியூதின் ஆரம்பித்து வைத்தார்

தலைமன்னார் பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றிருக்கும் மேற்படி இலவச மருத்துவ முகாமில் இரத்தப்பரிசோதனை, ஈ.சி.ஜி மற்றும் பொது மருத்துவப்பரிசோதனை என்பனவும் உள்ளடங்கும். மேற்படி மருத்துவ முகாமில் வைத்தியர்களான கே.எம்.நிஷாத் மற்றும் ஏ.நியுஷ் சில்லா மற்றும் உதவியாளர்கள் கடமையாற்றியதாக ஜமாத்தே இஸ்லாம் அமைப்பின் தலைமன்னார் பியர் கிளையின் தலைவர் நஜிம் தெரிவித்தார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment