53 வறிய முஸ்லிம் பயனாளிகளுக்கு மண் எண்ணெய் அடுப்பு வழங்கும் நிகழ்வு

DSC07655[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

காங்கேயனோடை: காங்கேயனோடை மீஸான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சிறி.ல.மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,தற்போதய உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.முபீனின் உழைப்போம் உயர்வோம் வாழ்வாதார உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரைம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேயனோடை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 53 வறிய முஸ்லிம் பயனாளிகளுக்கு மண் எண்ணெய் அடுப்பு வழங்கும் நிகழ்வு  20-12-2012 நேற்று வெள்ளிக்கிழமை காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மீஸான் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியத்தின் தலைவர் வி.கமலதாஸ்,’.மு.கா காத்தான்குடி நகர சபை உறுப்பினரும்,பெண்களுக்கும் வழுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸா, காங்கேயனோடை பத்ர் பள்ளிவாயல் தலைவர் ஆசிரியர் இல்யாஸ், ஊர் பிரமுகர்கள் மீஸான் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ,ஆரையம்பதி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் மற்றும் அதிதிகளினால் 53 வறிய முஸ்லிம் பயனாளிகளுக்கு மண் எண்ணெய் அடுப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.

காங்கேயனோடை மீஸான் நிறுவனம் காங்கேயனோடை பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்துவரும் மிகவும் பழமைவாய்ந்த நிறுவனம் என்பது குறிபிடத்தக்கது.

DSC07595[1]

DSC07651[1]

DSC07655[1]

Published by

Leave a comment