சுகாதாரப் பிரிவு தொண்டர்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கௌரவிப்பு

unnamed (10)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களில் பங்குபற்றிய காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவு தொண்டர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, ஸ்ரீ. மு.கா காத்தான்குடி நகர சபை உறுப்பினரும்,பெண்களுக்கும் வழுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸா, காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான றபீக்,றஹ்மதுல்லாஹ் உட்பட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் , சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவு தொண்டர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இதன் போது அதிதிகளினால் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவு தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் ,சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குடி நீர் தாங்கியும் அவ் அமைப்பின் தலைவர் ஹாரிஸ் ஜேபியிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

குறித்த சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment