கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கு சிப்லி பாரூக் பாராட்டு

Shibly– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அடியுள்ள கிராமத்திலும் இருந்து கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றி அதில் சித்தியடைந்து நல்ல பெறுபேறுகளை பெற்று காத்தான்குடிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்த தமிழ்-முஸ்லிம்  மாணவ மாணவிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் இம்மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுத்;தராதர உயர்தரப் பரீட்சையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இம் மாணவர்களின் ஒத்துழைப்பு இம் மாவட்டத்திற்கு கட்டாயம் தேவை எனவும் இவர்களை இவ்வாறான பெறுபேறுகளை பெறுவதற்கு எல்லா வழிகலிலும் உதவிய வல்ல இறைவன் அல்லாஹ்வுக்கும் அதற்கு அடுத்ததாக அவர்களுக்கு கற்பித்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் அவர்ளை வழத்தெடுத்த அவர்களின் தாய் தந்தையர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் இவ்வாறு சிறந்து பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகள் அதற்கு உதவிய அதிபர் ஆசிரியர்கள் சமூகத்தில் கௌரவிக்கப்பட வேண்டுமெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment