சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை மட்டக்களப்பில்

mubeen– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  மாவட்ட தொழிற்சந்தை நிகழ்வு எதிர்வரும் 21.12.2013 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நிகழ்வில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பசீர் சேகுதாவூத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இத் தொழிற்சந்தையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின் உயரதிகாரிகள்  பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment