காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் அழகிய தோற்றம்

meera masjid 3– MBM. றிப்தி

காத்தான்குடி: காத்தான்குடியின் பழைமையான மூன்று பிரதான ஜூம்ஆ பள்ளிவாயல்களில் ஒன்றாகத் திகழும், காத்தான்குடி 01, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், மீள் புணரமைப்பின் பின்னர் ‘இன்ஷா அல்லாஹ்’ இன்று ஜூம்ஆ தொழுகைக்கு மீண்டும் திறக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் நகமும் சதையும் போல் பின்னிப் பிணைந்திருந்த தமிழ்-முஸ்லிம்  உறவுகள் குறிப்பாக 1990ம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டன.

3ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1990, உலக வரலாற்றில் காத்தான்குடியின் மீது திசைதிருபப்பட்ட நாள். ஓர் இருள் சூழ்ந்த இரவுப் பொழுதில் தமிழீழ விடுதலைப் புலிகளால்  இப்பள்ளிவாயலிலும், ஹூஸைனியா பள்ளிவாயலிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 103 சகோதரர்கள் ஸ்தலத்தில் ஷஹீதானார்கள்.  அன்னார்களது மண்ணறைகளும் இப்பள்ளிவாயல் மையவாடியில் ஓர் வரலாற்றை தடம்பதித்திருக்கின்றன.

கடந்த வருடத்திலிருந்து துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இப்பள்ளிவாயில் பணிகள் தற்பொழுது நிறைவடைந்திருக்கும் நிலையில், இன்று ஜூம்ஆ தொழுகையிலிருந்து வழமை போல் இப்பள்ளிவாயல் இயங்கும்.

காத்தான்குடி-1, மீரா ஜூம்ஆ பள்ளிவாயின் ஓர் இரவு நேர அழகிய தோற்றங்களை ஊருக்கு வெளியிலும், கடல் கடந்து வாழும் எம் உறவுகளுக்குமாக இங்கு பதிவேற்றப்படுகிறது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment