மெட்ரிட்: ஸ்பெயினில் இருந்து ரோமானியா செல்ல விமானத்தில் ஏறிய கர்ப்பிணி விமானத்திலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பிணி ஒருவர் ஸ்பெயினில் உள்ள வலன்சியாவில் இருந்து விஸ் எயார் விமான மூலம் ரோமானியா தலைநகர் புகாரெஸ்ட்டுக்கு பயணித்தார். விமானத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
விமான சிப்பந்தி ஒருவர் மற்றும் விமானத்தில் பயணம் செய்த டாக்டர் ஒருவரின் உதவியோடு அந்த பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். விமானம் புகராரெஸ்ட்டில் இருக்கும் ஆட்டோபெனி விமான நிலையத்தில் வந்திறங்கியது. உடனே அந்த பெண்ணும், குழந்தையும் தயாராக வைக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்த பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர், அவரின் வயது என்ன என்பதை தெரிவிக்க விமான நிறுவனம் மறுத்துவிட்டது.
28 வாரங்கள் கர்ப்பமாக உள்ள பெண்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது மருத்துவர்களிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டும். 34 வாரங்கள் கர்ப்பமாக உள்ள பெண்கள் விமானத்தில் பயணம் செய்யக் கூடாது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment