புஹாரி நகர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா

unnamedரைஸ்

கிண்ணியா: முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்வு முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளர் தௌபீக் தலைமையில் ஈச்ச நகர் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.அன்வர், கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு போட்டிகளில் வெற்றி பெற்ற பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வுக்கு தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் சுபியான், கிண்ணியா, கந்தளாய் கல்வி வலயங்களின் உதவிப் பணிப்பாளர்கள், தோப்பூர் கோட்டக் கல்வி அதிகாரி, பள்ளிவாயல் தலைவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பொது மக்களென ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment