கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் சொந்தமான உள்ளூராட்சி மன்றங்களின் 2014 வருடத்துக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக் கப்பட்ட வேளை யில் அதனைத் தோற்கடிக்க வாக்கைப் பயன்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும், அவர்கள் தற்போது வகிக்கும் பதவிகளில் இருந்து அவர்களை விலக்குவதற்கும் தீர்மானிக்கப்பட உள்ளது.
வரவு – செலவு திட்டத்துக்கு எதிராக வாக்குகளை பயன்படுத்திய எவரும் உள்ளூராட்சி மன்றப் பதவிகளில் இனிமேல் நியமிக்கப்படமாட்டார்கள்.
புதிய தலைவர் பதவிகளை நிரப்பும் போது சார்பாக வாக்களித்த உறுப்பினர்களை மட்டும் அந்தப் பதவிகளுக்கு நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது.
இதுபற்றி ஸ்ரீ ல. சு. கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
Leave a comment