உலக சாதனையை சமப்படுத்திய அதிரடி பெய்லி!

baily– MJ

பேர்த்: அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோர்ஜ் பெய்லி, தான் சந்தித்த ஓர் ஓவரில் 6 பந்துகளுக்கு 28 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டி வரலாற்றில் பெறப்பட்டிருந்த சாதனையைச் சமன் செய்திருக்கின்றார்.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் பேர்த்தில் இடம்பெற்றுவரும் 3வது ஏஸஸ் டெஸ்ட் போட்டியின் 4வது நாளின் முடிவில் இறுதியாக இங்கிலாந்து முன்னணி பந்துவீச்சாளர் அண்டர்சனால் வீசப்பட்ட 6 பந்துகளுக்கும் 4,6,2,4,6,6 என ஓட்டங்களைப் பெற்று, 10 வருடங்களுக்கு முன்னர் பிரையன் லாராவால் நிகழ்த்தப்பட்டிருந்த இச்சாதனையை பெய்லி சமப்படுத்தி இருக்கிறார்.

 தென்னாபிரிக்காவின் பந்து வீச்சாளர் ரொபின் பீட்டர்சன் வீசிய ஒரு ஓவரில் 28 ஓட்டங்களைப் பெற்று இச்சாதனை அன்று லாராவால் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு:

http://www.youtube.com/watch?v=A8TZioqN7Xw

Published by

Leave a comment