டெல்லி: எனது மகள் கைதில் பெரும் சதி அடங்கியுள்ளது. இனவெறியுடன் நடந்து கொண்டுள்ளனர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்காவில் கைது செய்யப்ப்ட்ட இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்கரடேவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.தேவ்யானியின் தந்தை உத்தம் கோப்கரடே, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவைச் சந்தித்து தனது மகள் விவகாரம் குறித்துப் பேசினார். பின்னர் அவர் கூறுகையில், எனது மகளை இனவெறியுடன் நடத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். இனவெறியுடன் நடந்துள்ள செயல் இது.இதற்காக அமெரிக்க காவல்துறையும், அரசும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். எனது மகளின் பெயரைக் கெடுக்கும் வகையிலும், இந்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமெரிக்கர்கள் நடந்து கொண்டுள்ளனர். இது மிகப் பெரிய சதிச் செயல்.இனவெறிச் செயல் இது என்பதில் சந்தேகமே இல்லை. மிக மிகத் தெளிவாக இது அனைவருக்கும் புரியும். இந்தியர்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கை இது. இந்திய அரசு இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மிக மிக கடுமையாக இதை அணுக வேண்டும் என்றார் அவர் கோபமாக.
Published by

Leave a comment