கொழும்பு: இலங்கையின் இலவச சுகாதார சேவை வரலாற்றில் முதற்தடவையாக 10,400 பேர் அரசாங்க சுகாதார சேவைக்கு நாளை 17ம் திகதி சேர்ந்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில்,
இந்த 10400 பேரில் 6035 பேர் தாதியர் பயிற்சிக்காகச் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். அதேநேரம் தாதியர் பயிற்சியை பூர்த்தி செய்துள்ள
1900 தாதியர் அரச தாதியர் சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர்.
இதேவேளை துணை மருத்துவ சேவையிலும், மருந்தாளர் சேவையிலும் உள்ள 14 வகையான பதவிகளுக்கென 2000 பேரும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இவர்களில் இணை சுகாதார பீடப்பட்டதாரிகள் 281 பேரும் அடங்கியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் மஹிந்த சிந்தனையின் கீழ் இலவச சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு பலவிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2005இல் காணப்பட்ட சுகாதார துறை ஊழியர்களின் எண்ணிக்கை 2013ம் ஆண்டு நிறைவுறும் போது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.tk
Published by
![Sri-Lanka-goverment-logo2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/sri-lanka-goverment-logo21.jpg?w=92&h=120)
Leave a comment