ஆரையம்பதி சந்திரா பிறிட்டிஸ் இங்லிஸ் கொலிஜின் 2013ம் வருடத்திற்கான ஆங்கில பாடநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

unnamed (4)பழுலுல்லாஹ் பர்ஹான்

ஆரையம்பதி: மட்டக்களப்பு – ஆரையம்பதி சந்திரா பிறிட்டிஸ் இங்லிஸ் கொலிஜின் 2013ம் வருடத்திற்கான ஆங்கில பாடநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்; வழங்கும் நிகழ்வு சந்திரா பிறிட்டிஸ் இங்லிஸ் கொலிஜின் பணிப்பாளர் திருமதி ச.சரவணமுத்து தலைமையில் ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது அதிதிகளினால் மாணவர்களுக்கு சான்றிதழும், கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்; ,மட்டக்களப்பு வலய ஆங்கில உதவிக் கல்விப்பணிப்பானர் சந்திரகுமார், பட்டிருப்பு வலய ஆங்கில உதவிக் கல்விப்பணிப்பானர் சந்திரகாசன் ,உயர் தொழில் கற்கை நிறவக இணைப்பாளர் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.   

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment