ஆரையம்பதி: மட்டக்களப்பு – ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2014ம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி தமிழ் வகுப்பு ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச்சங்க கேட்போர் கூடத்தில் ஆற்றல் பேரவைத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனின் தலைமையில் (இன்று 16.12.2013) திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு -அம்பாரை மாவட்டங்களின் பிரபல்ய ஆரம்பப்பிரிவு தமிழ் ஆசான் பி.பரமதயாளன் வளவாளராக கலந்துகொண்டார்.
ஆரையம்பதி ஆற்றல் பேரவை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment