ஹஸ்டன்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜக்ச, டட்லி ராஜபக்ச, கோத்தபய ராஜபக்சேவிற்கு மூத்தவர். சமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு இளைய சகோதரராவார்.
பசில் ராஜபக்சவிற்கு சிகிச்சைப் பெற்று பூரணமாக குணமடையும் தருவாயிலேயே புற்றுநோய் நிலை காணப்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள ஹஸ்டன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ராஜபக்ச சகோதரரான அமெரிக்காவில் வசித்துவரும் டட்லி ராஜபக்ச கவனித்து வருகிறார்.
Published by
![Basil[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/basil1.jpg?w=120&h=150)
Leave a comment