பார்வை இழந்தோருக்கான அல்குர்ஆன் பயிற்சி நெறி தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

kky j ulamaஅன்புடையீர்,  அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

அகில அலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மக்தப் புணரமைப்புக் குழு பார்வை இழந்தோருக்கு புனித அல்குர்ஆனை சரளமாக ஓதுவதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விஷேட வகுப்புகளை இத்துறையில் அனுபவமும் திறமையுமிக்க சர்வதேச ஆலிம்களின் வழிகாட்டலோடு ஆரம்பிக்கவுள்ளதுடன், இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக நாட்டிலுள்ள பார்வையிழந்த அனைவரின் தகவல்களையும் ஒன்று திரட்டி வருகின்றது.

எனவே, எமது பிரதேசத்தில் காணப்படும் பார்வை இழந்தோரின் தகவல்களை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சேகரிக்கவுள்ளதால், வெள்ளி தவிர்ந்த ஏனைய நாட்களில் ஜம்இய்யா காரியாலயத்தில் இரவு 07.00 மணி முதல் 09.00 மணிவரை தகவல்களை பதிவு செய்து கொள்ள முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ்வண்ணம்,

ஜம்இய்யதுல் உலமா,

காத்தான்குடி.

2013.12.15

Published by

Leave a comment