கெப்டவுண்: தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று அவர் பிறந்த கிராமத்தில் நடைபெறுகிறது.
கடந்த 5ம் திகதி அன்னார் தன்னுடைய 95 வது வயதில் மரணமானார். அவருடைய ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்காக கடந்த 11ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் 91 நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் கலந்து கொண்டமை சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாக கருதப்படுகின்றது.
ஓர் இன விடுதலையைப் பெற்றுத் தந்த பிதாவென்று போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையொன்று நாளை தென்னாபிரிக்கா யூனியன் கட்டட சதுக்கத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரது இறுதி நல்லடக்கத்தில் பல நூற்றுக்கணக்கான உலகத் தலைவர்களுடன் பல இலட்சம் மக்கள் கலந்துகொள்வதுடன், உலகெங்கிலுமுள்ள பல கோடி மக்கள் தங்களது அஞ்சலிகளையும் செலுதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
![mandela[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/mandela1.jpg?w=75&h=105)
Leave a comment