காத்தான்குடி அல்-ஹூதா பாலர் பாடசாலையின் 21வது வருடாந்த கலை விழா

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி அல் – ஹூதா பாலர் பாடசாலையின் 21வது வருடாந்த கலை விழா 13-12-2013 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அல்-ஹூதா பாலர் பாடசாலையின் தலைவர் எம்.சி.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உள்ளிட்ட அதிதிகளினால் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமிகளுக்கு பரிசில்களும் ,சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது.

இங்கு இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பாலர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ,பாலர்களுக்கு கற்பித்த ஆசிரியைகள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ.;எம்.எம்.சுபைர்,கா-குடி அல் ஹிறா வித்தியாலய அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார்,மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் ,ஆசிரியர் ஜூனைட்,வசந்தம் டிவி செய்தி அறிவிப்பாளர் சுக்ரி உட்பட ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள், அல்-ஹூதா பாலர் பாடசாலை நிர்வாகிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர். 

 

This slideshow requires JavaScript.

Published by

One response to “காத்தான்குடி அல்-ஹூதா பாலர் பாடசாலையின் 21வது வருடாந்த கலை விழா”

  1. Every events are Best & Best.
    Where is LUCKY?????? he never missed any photos.

Leave a reply to mohmedrislaan Cancel reply