கல்குடா: பொதுத்தேர்தல் தொட்டு மாகாண சபை தேர்தல் வரை முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை வேட்பாளரும் ஜம்மிய்யத்துல் தஃவதில் குர்ஆனிய்யாவின் தலைவருமான அல்ஹாஜ் மௌலவி SHM. அஷ்ரப் அவர்கள் கலந்துகொண்டு 14-06-2013 அன்று கல்குடாவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் பேசும்பேது கூறியதாவது,
நாடளாவிய ரீதியில் மாகாண மட்டத்தில் தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் நமது அரசியல் தலைமைகள் முதலாளிய கொள்கைகளுக்கு தம்மை விற்றுக்கொள்வதும், அதிகார வர்க்கத்துடன் சமரசமாவதும், இனவாத சக்திகள் முஸ்லிம் விரோத நடவடிக்கையில் ஈடுபடும்போது கள்ள மௌனம் சாதித்து விட்டு பின்னர் வீராப்பு பேசுவதும்தான் இன்று முஸ்லிம்கள் அனூவித்து வரும் வாக்குக்கொடுத்தலின் பிரதிபலனாகும். எமது முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் தலைவர்களும், போர்க்காலத்திலும் சரி போருக்குப் பிந்திய காலத்திலும் சரி எமது சவால்களைப் புரிந்துகொண்டு அவற்றை எதிர்கொள்வதற்கான எந்தவொரு பிரஞை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.
எல்லாம் தேர்தல் காலத்து வெற்றிக்கோசங்களாகவே மாறிவிட்டன. முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த பொதுத் தேர்தலின் போது கல்குடாவிற்கு பற்பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதில் ஒன்றுதான் தேசிய பட்டியல் விவகாரம். அத்தேர்தலில் பல இன்னல்களுக்கு மத்தியில் லெப்பை ஹாஜியும், ஆடீஆ. ஹூசைன் அவர்களும் களமிறங்கினர். கட்சி கொடுத்த பணத்தில் லெப்பை ஹாஜி செலவு செய்தார். னுச. அஜ்வத் அவர்களின் உதவியைக்கொண்டு ஹூசைன் நானா கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாவிற்கு மேல் செலவு செய்து கடும் பிரச்சினைகளுக்கு, அடிதடிகளுக்கு மத்தியில் தேர்தலில் அமீரலியை தோற்கடித்தார். தேசியத்தலைவரின் வாக்குறுதியை நம்பி, வாக்களிக்கும் போது பஷீர் சேகுதாவூதின் இலக்கத்திற்கும் சேர்த்து வாக்களித்துவிட்டோம். காரணம் தோல்வியடைந்தாலும் பரம்பரை பரம்பரையாக சேகுதாவூர் அவர்களுக்கு போகக்கூடிய தேசியப்பட்டியலாவது கல்குடாவிற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக வாக்களித்தோம்.
நாங்கள் நினைத்தது போன்று அமீர் அலி தோற்கடிக்கப்பட்டார். லெப்பை ஹாஜியும், ஹூசைன் நானாவும் தோற்றுப்போனார்கள். பஷீர் சேகுதாவூத் அதிஸ்டவசமாக வெற்றியடைந்தார். தோல்வியுற்ற கையோடு இருக்கும்போது அமீர் அலியின் அட்டகாசமோ தலைதூக்காடியது. தாஹிர் ஹாஜியாரின் வீடு, உஸாமா தௌபீக் அவர்களின் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. எனது வீட்டையும் உடைப்பதற்காக வேண்டி வந்தார்கள். நானும் ஜாதிக சங்விதான என்ற கட்சியின் வேட்பாளராக இருந்தமையால் எனது வீட்டுக்கும் 04 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் சுமார் தேர்தல் ஆரம்பித்ததிலிருந்து தேர்தல் கலவரம் முடியும் வரை இருந்ததால் அல்லாஹ்வின் உதவிகொண்டு எனது வீட்டை உடைக்க வந்த கூட்டத்தை பொலிஸார் விரட்டியடித்தார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையானது கல்குடாவிற்கு எதுசரி பெற்றுக்கொடுக்கும் என்ற நோக்கில் கண்டிக்கு இரண்டு வேன் எடுத்துக்கொண்டு தலைவரின் வேண்டுகோளுக்கினங்க ஜானகி ஹோட்டலுக்குச் சென்றோம். எங்களுடன் மிக அன்பாய் பேசினார் தலைவர். கல்குடாவிற்கு சன்மானம் தருவதாக வாக்குறுதி அளித்தார், அவரின் பேச்சு எமக்கு நம்பிக்கையூட்டியது.
அதன் பின்பு யோசித்தோம் வாக்களித்த கல்குடா மக்களின் சார்பாக பஷீர் சேகுதாவூதிடம் போய் கேட்டுப்பார்ப்போம். என்று தீர்மானித்து நானும், ஹனிபா ஹாஜியார், அஸீஸ் ஹாஜியார், நிஸார் ஹாஜியார் எல்லோருமாக பஷீர் சேகுதாவூத் (பா.உ) அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். எங்களை வரவேற்றனர். அதன் பின்பு ஹனிபா ஹாஜியார் விடயத்தை ஆரம்பித்தார். கல்குடா மக்கள் உங்களுக்கும் வாக்களித்து நீங்கள் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு கிடைக்கின்ற அந்த தேசிய பட்டியலை கல்குடாவிற்கு தருவதற்கு தலைவரிடம் பேசிப்பாருங்கள் என்றாhர். பஷீர் சேகுதாவூத் என்ன சொன்னார் என்றால், கல்குடா மக்கள் எனக்கு வாக்களித்ததா? எனக்கு வாக்களித்தது. தமிழ் மக்கள் தான் என்றார். இன்னமும் எங்களது காதுகளில் அந்த வார்த்தை ஒலித்த வண்ணம் இருக்கிறது.
கல்குடாவின் குமுறல் இப்பொழுதுதான் மக்களுக்கு இந்த உண்மையை சொல்கிறது. கிட்டத்தட்ட (5500) வாக்குகளை அள்ளிக்கொடுத்துவிட்டு பஷீர் சேகுதாவூத் சொன்னதைக் கேட்டு மனம் நொந்த நிலையில் ஹனிபா ஹாஜியார் சொன்னார் இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு நாம் வந்துவிட்டோம். இப்படியே காலம் கடந்து சென்றது. யாருமே எமது கல்குடா மண்ணை நினைத்துப் பார்க்காதவர்களாகவே இருந்தார்கள் தலைவர் உட்பட. பிரதேச சபை தேர்தலை எதிர்நோக்க வேண்டிய தருணம் வந்தது. ஒரு நாள் 12.30 மணியளவில் தொலைபேசி அழைப்பு வருகிறது. லெப்பை ஹாஜியாரின் மில்லுக்கு தலைவர் ரவூப் ஹக்கீம் வருகிறாரம் வரட்டாம் என்று. அந்த நேரத்தில் ஆட்டோ ஒன்றை எடுத்துக்கொண்டு எனது தம்பி சட்டத்தரணி ராஸிக் அவர்களையும் அழைத்துக்கொண்டு செல்லும் நோக்கில் அவர்களின் வீட்டுக்கதவைத் தட்டினேன். சில நிமிடத்தின் பின் என்னவென்று கேட்க தலைவர் லெப்பை ஹாஜியாரின் வீட்டுக்கு வந்துள்ளார் வாருங்கள் போவோம் என்றேன். அதற்கு சட்டத்தரணி அவர்கள் வர மறுத்துவிட்டார். நான் மட்டும் ஆட்டோவில் போனேன். அங்கு ஹனிபா ஹாஜி, லெப்பை ஹாஜி, ஹூசைன் நானா, ஹமீட் மாஸ்டர் இன்னும் பல போராளிகள் அங்கு இருந்தனர். லெப்பை ஹாஜியும், ஹனிபா ஹாஜி உட்பட இப்பிரதேச சபைத்தேர்தலை முன்னெடுப்பதென முடிவெடுத்தார்கள். அதற்கு தலைவரும் உடன்பட்டார். அதன் செலவீனமாக 01 கோடி ரூபாய் கேட்டார்கள். அதற்கு தலைவர் தலா 25 லட்சம் வீதம் இரண்டு பேருக்கு 50 லட்சம் தருவதாகச் சொன்னார். அதற்கு 01 கோடியிலேயே ஹாஜிமார்கள் நின்றார்கள். பிறகு யோசிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு சுமார் 03.30 மணியளவில் தலைவர் அம்பாரை நோக்கிச் சென்றார்.
பின்னர் பிரதேச சபைத் தேர்தலுக்கு யார் முகம் கொடுப்பதென பெரும் அமலி துமலியாக இருந்தது. ஊரிலுள்ள மூலை முடுக்கு, சந்து பொந்துக் கெல்லாம் சென்று யார் யார் இருந்தார்களோ அவர்களின் கை கால்களைப் பிடித்து போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் தம்பி சட்டத்தரணி ராஸிக் அவர்கள் தேர்தலில் நிற்பதாகக் கூறிவிட்டு அவரும் கடைசியில் கை நழுவி விட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் இஸ்மாயில் ஹாஜியார் தலைமையில் நானும் பிரதேச சபைத் தேர்தலில் குதித்தேன். என்னுடன் சேர்த்து 12 பேர் தேர்தலில் முகம்கொடுத்தோம். எங்களுடைய கால நேரம் சரி இல்லையோ என்னவோ தெரியாது கால நிலை சீர் கேட்டால் வெள்ளமும் தண்ணீருமாய் ஊரே மூழ்கியது. அந்த நேரமே தேர்தலும் வந்தது. பல பக்கத்தாலும் மக்களுக்கு நிவாரணம் என்ற பேர்வையில் சாமான்கள் நிறைந்தன. எங்களால் இயன்றதைக் கொடுத்தோம்.
பஷீர் சேகுதாவூத் அவர்கள் பாண், வட்டர் பேக் என சிறு சிறு உதவிகளைச் செய்தார். தலைவர் அவர்கள் ஹனிபா ஹாஜிக்கும், லெப்பை ஹாஜிக்கும் தருவதாகக் கூறிய 50 லட்சத்தில் 25 லட்சம் ரூபாவை கல்குடா மக்களுக்கு செலவு செய்திருந்தால் கூட இலகுவாக வென்றிருக்கலாம். பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்கள் 10 000 ரூபாவும், மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்கள் 25 000 வும் எனது தேர்தல் காலத்தில் அனுப்பி வைத்தார்கள். நான் கிட்டத்தட்ட 200இ000ஃ- ரூபா மட்டில் செலவு செய்திருப்பேன். பொதுத் தேர்தலில் செய்தது போதாது என்று இப்பிரதேச சபைத் தேர்தலிலும் னுச. அஜ்வத் அவர்கள் எங்கள் 12 பேரையும் போட்டே எடுத்து 5000 போஸ்டர்கள் அடித்துத்தந்தார்கள். கட்சி மீது கொண்டுள்ள அன்பு பாசம்தான் இது. தேர்தல் சூடுபிடித்தது. எங்கு பார்த்தாலும் மேடைப்பேச்சுக்கள். ஏச்சும், பேச்சும் நடந்த வண்ணம் இருந்தது. எங்களது கூட்டம் ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவுச்சங்க வளாகத்தில் நடந்தது.
தலைவர் ஹகீம் அவர்கள் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் தலைவரிடம் கூறினோம். தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்கள் Co-Op பிரதி அமைச்சராக இருக்கின்றார். அதில் ஒரு கோடிநேட்டர் பதவியை லெப்பை ஹாஜியாருக்கு கொடுத்து இந்த மேடைக்கு கொண்டு வரவேண்டும் சேர் என்று தலைவரிடம் கூறினோம். அந்த விடயத்தை தலைவர் அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார்கள். இந்த மேடையில் இல்லாதவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த மேடையில் இருப்பார்கள் என்று சொன்னது மட்டும்தான் அதன் பின்னர் ஒரு கூட்டமாவது நடைபெறவும் இல்லை, தலைவர் வரவும் இல்லை, கோடிநேட்டர் பதவி பஷர் சேகுதாவூதால் தரப்படவும் இல்லை. கல்குடாவிற்கு நல்லது செய்ய வேண்டுமென்று யாருக்கும் விருப்பமும் இல்லை.
கட்சிப்பாட்டையும், அல்லாஹூ அக்பர் என்று கோஷத்தையும் எழுப்பினால் மக்கள் திரண்டு விடுவார்கள் என்று நினைத்தார்கள். அது தலை கீழாக மாறி வாக்களிப்பின் பின்னர் ஒரே ஒரு உறுப்பினர் மாத்திரம் வந்தார், வரவைத்தார்கள். அந்த பிரதேச சபைத் தேர்தலும் நடந்து முடிந்து காலம் கடந்து யாருமே எந்த ஒதுக்கீடுகளும் செய்யவில்லை. காலம் உருண்டோடியது. அவ்வாறு இருக்கும் போது மாகாண சபைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அறிந்தோம். அத்தேர்தலில் வெற்றிலைச்சின்னத்தில் அரசுடன் சேர்ந்து கேட்பதா? தனித்து மரச்சின்னத்தில் கேட்பதா என்பது பற்றி வாதப்பிரதி வாதங்கள் நடந்தன. இறுதியில் மரச்சின்னத்தில்தான் கேட்பதாக முடிவாகியது. அதில்
வேட்பாளர்கள் போட்டியிடுவதில் பல சிக்கல்கள் நடந்து கல்குடாவிற்கு 03 பேரை வேட்பாளர்களாக களமிறக்கி கல்குடாவில் ஒருவரும் வரக்கூடாது ஏறாவூரில் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் வரவேண்டும் என்று கட்சி நினைத்தது. நினைத்தது நடந்தது. ஆரம்பமாக கட்சிக்கு கல்குடாவில் ஒரு தளம் வேண்டும் என்று மாவடிச்சேனையில் ஒரு கடையை குத்தகைக்கு எடுத்து திறந்தார்கள். அதில் தலைவர், பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்னும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மாவட்ட முதன்மை வேட்பாளராக களமிறங்கிய பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் பேசினார். ஆசனங்களைக் கூட்டுவது தான் கட்சியின் நோக்கமாகும். அவ்வாறு ஆசணங்களை கூட்டுவதில் கஸ்டம் ஏற்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே ஒரு ஆசனம் கிடைக்குமாக இருந்தால் அந்த ஒரு ஆசனம் எனக்கு கிடைக்குமாக இருந்தால் அதை நான் இராஜினாமாச் செய்துவிட்டு கல்குடாவிற்குத் தருவேன் என்றார்.
பிரதித் தலைவர். (ஒரு ஹாபிஸின் அல்லாஹ்வின் குர்ஆனை மனனம் செய்தவரின் வாக்குறுதியை பின்பு பார்ப்போம்.) தேர்தல் சூடு பிடித்தது. முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்திற்கே மக்கள் திரண்டார்கள். நாங்களும் நினைத்தோம், கட்சி பிரமுகர்களும் நினைத்தார்கள், வேட்பாளர்களும் நினைத்தார்கள் கட்சியின் வியூகமும் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவாவார்கள் அதில் கல்குடாவிற்கு ஒரு உறுப்பினர் கிடைப்பார் என்று. நினைப்பது எல்லாம் நடப்பதில்லை. மக்கள் நினைத்ததுதான் நடந்தது. தலைவர் சொன்னார் வெற்றிலைச்சின்னத்துக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கு வினையாகத்தான் அமையும். இப்போது அது பொது பலசேனா என்ற போர்வையில் வந்துள்ளது. மக்கள் தகுந்த பாடம் கற்பித்தார்கள். மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஒற்றுமையின்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் நின்று தேர்தல் கேட்டதால் கட்சி நினைத்தது போன்று ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மற்றவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அடுத்த அமைச்சுப்பொறுப்பு கொடுப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது.
அரசாங்கத்தோடு இணைவதா? கூட்டணியோடு இணைவதா? என்ற வாதப்பிரதி வாதங்களுக்கு பின்பு அரசாங்கத்தோடு இணைவோம் என்று முடிவு செய்தார்கள். மத்திய அரசாங்கத்தில் அரசாங்கத்தோடும் மாகாணத்தில் கூட்டணியோடும் இருந்தால் பெரும் பிரச்சினை வரும் என்ற காரணத்தினால் அரசாங்கத்துடனேயே இணைந்து அமைச்சுப்பதவியையும் ஏற்றார்கள். பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு 05 அமைச்சுகள் வழங்கப்பட்டது. அல்லாஹ்வைப்பயந்தவர், நல்ல நீதமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்க இருந்தது. ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் பதவியேற்புக்கு நானும் சென்றிருந்தேன்.
ஓரிரு மாதங்கள் ஓடின. ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் அமைச்சுக்களில் இருந்து கல்குடாவிற்கு எதில் சரி ஒரு கோடினேட்டர் கொடுப்பாரோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. யாருக்கும் கொடுபடவில்லை. கல்குடாவில் தேர்தல் கேட்ட 03 வேட்பாளர்களையும் அழைத்து ஒவ்வொரு அமைச்சுக்களிலேயும் கோடினேட்டர் தரவா என்று கேட்டதாக தம்பி சட்டத்தரணி ராஸிக் அவர்கள் கூறினார்கள். ராஸிக் தம்பி வேண்டாம் என்று சொன்னதாகவும் கேள்விப்பட்டேன். மற்றைய இரண்டு வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்க கொடுத்து இருக்கலாம். அல்லது ஹூசைன் நானா அவர்கள் பேங்கில் வேலை செய்யும் போது அந்த வேலை முடிந்த கையோடு மேடையில் வந்து பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப்போவார். இந்தக்கட்சிக்காக அலப்பரிய சேவையை செய்திருக்கிறார். சென்ற பொதுத்தேர்தலின் போது 75 லட்சத்துக்கும் மேல் செலவழித்து தனது வேலையையும் பெற்றுக்கொள்ளாமல் மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஹூசைன் நானாவுக்காவது ஏதாவது ஒரு கோடினேட்டர் பதவி கொடுத்திருக்கலாம்.
கல்குடாவின் பங்களிப்பு இல்லாவிட்டால் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் மாகாண சபை உறுப்பினராக வந்திருக்க முடியுமா? முதலில் அதைச் சிந்திக்க வேண்டும். மருமகனும், ராஜாவும் நாங்கள் போட்ட பிச்சையில் அவர்கள் சம்பளம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதன் மூலம் வாழ்க்கை ஓட்டுவதை அல்லாஹ்தான் ஏற்றுக்கொள்வானா? உங்களின் ஊர்களையும் மதிக்கத்தான் வேண்டும். அத்தோடு உங்களை நேசித்த கிராமங்களையும் நீங்கள் நேசிக்க வேண்டும். வாழைச்சேனை பள்ளிவாயலுக்கு தேர்தல் காலங்களில் வாக்களித்ததை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்களிப்பதை தேர்தல் முடிந்தபின்பு கட்டாயம் நிறைவேற்றிக்கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும். இன்னும் பல விடயங்கள். ஆகவே இவ்வாறு இனிமேல் நடக்காமல் கட்சிக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர்களை பார்த்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து இன்னுமின்னும் கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் உதவி ஒத்தாசை புரிவதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்ய வேண்டும்.
தலைவர் அவர்கள் காதி நீதிமன்றம் திறக்க வந்தார்கள் அது திறந்து வைப்பதற்கு தடை ஏற்படவும் பாசிக்குடாவில் அமைந்துள்ள மாலு மாலு ஹோட்டலில் 03 நாட்கள் குடும்ப சகிதம் வந்து சென்றுள்ளார்கள். மாகாண சபைத்தேர்தல் முடிந்து இதுவரைக்கும் ஒரு தடவையாவது இந்த கல்குடா மக்களை சந்திக்க வரவில்லை. மாலு மாலு ஹோட்டலில் 03 நாட்கள் தங்கியிருந்ததில் இரண்டு மணித்தியாலங்கள் கல்குடா மக்களுக்காக வேண்டி ஒதுக்கி சிறு கலந்துரையாடலையாவது செய்துவிட்டு போயிருக்கலாம். அம்பாறை மாவட்டத்திற்கு அடிக்கடி விஜயம் செய்கின்றார்கள். அங்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் கல்குடா மக்கள் அரசியலில் அனாதையாக இருக்கின்றார்கள். தலைவர் அவர்களே இனிமேல் நீங்களும் ஒதுக்கித்தள்ளிவிட வேண்டாம். உங்கள் அமைச்சில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சிப்போராளிகளுக்கு வேலை கொடுத்திருக்கிறீர்கள் அவர்கள் படித்தவர்கள் என்றா? மேலும் நீதி அமைச்சராக இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த மக்களின் சிறுஅபிலாசைகளை நிறைவேற்ற முடியாத கையாளாத நிலையில் தலைவர் இருப்பதையிட்டு வேதனையடைகின்றேன்.
குறிப்பாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு கல்வி வலயப்பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஒட்டமாவடியை சேர்ந்த சேகு அலி அவர்களை கடமை பொறுப்கேற்க விடாமல் அமீரலி தடுத்த போது தலைவர் பராமுகமாக இருந்ததையும், ஓட்டமாவடி பிரதேச சபைக்கு நிர்வாக சேவையில் சித்தியடைந்த சுப்றா தகமையுடைய பாறூக் என்பவர் செயலாலராக நியமிக்கப்பட்ட போது கடமை பொறுப்பேற்க விடாமல் அமீரலி தடுத்த போது தலைவர் கையாலாகாத்தனமாக இருந்ததையும் பார்க்கும் போது அமீரலியின் அடாவடிகளுக்கு தலைவரும் ஒத்துழைப்பு வழங்குகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
முன்புதான் கட்சித்தலைவர்கள் ஊரூராகப் பயணம் செய்து வேட்பாளர்களைத் தேடிச் சேர்த்து தேர்தலில் நிற்க வைத்து வெற்றியீட்டிய காலம் இருந்தது. இன்று கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்னால் பணத்துடன் வேட்பாளராருவதற்கு முன்டியடித்துக்கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டுவிட்டதால் மக்களை எங்கே கவனிக்கப்போகிறார்கள். அதனால் எந்த மக்களின் நலன்களுக்காக அரசியல் தொடங்கப்பட்டதோ, அந்த மக்களின் மொத்த நலன்களும் புறம் தள்ளப்பட்டு மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் என அரசியல் வியாபாரம் தொடர்கிறது.
தலைவர் அவர்களே! எங்கள் கல்குடா மக்களும் படிக்காத மடையர்கள் அல்ல. சட்டத்தரணி என்றும் நீதவான் என்றும் டாக்டர்கள் என்றும் எஞ்ஜினியர்கள் என்றும் ஆசிரியர்கள் என்றும் பலதரப்பட்ட துறைகளில் எமது கல்குடா மக்கள் படித்து பட்டம் பெற்றுள்ளார்கள். இன்னும் பட்டம் பெற எத்தனையோ சகோதரர்கள் இருக்கின்றார்கள். எமது கல்குடா மக்களையும் கவனத்தில் கொண்டு நல்லது செய்வீர்கள் என்று கூறி உங்களின் ஆயுலுக்கு பிராத்தித்தவனாக முடிக்கின்றேன்.
ஆமீன்.
AL-Haj SHM. Ashraff Mou.
Whole Island J.P.
Published by

Leave a comment