கொழும்பு: ஜப்பான் நாட்டின் விஷேட துாதுவருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதீயுதீன் தலைமையிலான பிரதி நிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை அமைச்சில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக மனிதாபிமான நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்த் 3 இலட்சம் தமிழ் மக்களை அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த தான், அவர்களை பராமரித்து அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்தது தொடர்பில் யசூசி அகாசியிடம் அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்துரைத்தார். இம்மக்களின் இடம் பெயர்வுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் அகதி முகாம்களில் இருந்த நிலையில் இனபாகுபாடுகளின்றி தமிழ் மக்களை மீள்குடியேற்றி அவர்களது பிரச்சினைகளை நீண்டதாக மாற்றமால் தான் செயற்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முற்றுப் பெறாததொன்றாக இருப்பதாக எடுததுரைத்தார்.
இம் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு போதுமான ஒத்துழைப்புக்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்காமல் இருப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பேசப்படும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் முஸ்லிம்களின் வைகிப்பகம் தொடர்பில் சிறப்பு துாதுவருக்கு இதன் போது விளக்கமளிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவி்த்தார்.
அபிவிருத்தியின் பக்கம் ஜப்பான் இலங்கையுடன் கொண்டுள்ள உறவு , நெருக்கம் தொடர்பில் தமது நன்றிகளை தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகள் தொடர்பில் ஜப்பானின் விசேட துாதுவர் யசூசி அகாசியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
தற்போதைய அமைதிச் சூழலில் வாழும் முஸ்லிம்களும் தமிழர்களும் வடக்கு, கிழக்கு இணைப்பை விரும்பாத நிலையில் சில சக்திகள் சர்வதேச சமூகத்தின் மூலம் வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பில் கொடுக்கும் அளுத்தம் தொடர்பிலும் இதன் போதும் முஸ்லிம்கள் தொடர்பில் ஜப்பான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதே வேளை கிழக்கில் 15 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான முஸ்லிம்களது காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பில் பல முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடன் பேசிய போதும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஜப்பானிய விசேட துாதுவரிடத்தில் எடுத்தியம்பியதுடன் இலங்கைக்கான தங்களின் நல்லென்ன விஜயத்தின் வெளிப்பாடாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கருத்து பறிமாரல்களை செய்யும் போது இவ்விடயம் தொடர்பிலும் பேசுமாறும் கேட்டுக் கொண்டார்.
இவற்றுக்கு பதிலளித்த ஜப்பானிய விசேட துாதுவர் யசூசி அகாசி இவ்விடயங்களில் ஜப்பான் தமது ஒத்துழைபை்பினை நல்கும் என்றும் இக்குழுவினரிடத்தில் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்இகட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஜனுாபர், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment