கொழும்பு: தொலைபேசிகளை திருத்துதல் கையடக்க தொலைபேசிகள் தொடர்பான தொழில்நுட்பங்கள் அறிவைப் பெற்றுக் கொள்ள விரும்பும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சி நெறி ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் இலங்கை தொழில்நுட்ப அபிவிருத்திச் அதிகார சபையின் கொழும்பு மாவட்ட அலுவலகமேஇ இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது.
இந்த பயிற்சியில் கலந்துக் கொண்டு அதனை வெற்றிகரகரமாக முடிப்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன .
இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள விரும்பினால் 92-இரண்டாம் மாடி ஹைலெவல் பிளாஸா கட்டடம் தெல்கந்தை நுகேகொடை என்ற முகவரியுடன் அல்லது 0112815009 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது idbcolombo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். lk
Published by
![mobile_phone_mass_media_1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/mobile_phone_mass_media_11.jpg?w=150&h=117)
Leave a comment