காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் உள ஆரோக்கிய சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

unnamed (1)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு-காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதற்தடவையாக உளநல நோயாளிகளின் நன்மை கருதி 13-12-2013 இன்று வெள்ளிக்கிழமை உள ஆரோக்கிய சிகிச்சை நிலையம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரினால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலை உள நல வைத்திய நிபுனர் டாக்டர் திருமதி.சுசிகளா பரம குரநாதனினால் உளநல நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடி வைத்தியசாலை வைத்தியர்கள்,வைத்திய தாதிகள், வைத்திய ஊழியர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் முயற்சியினால் இன்று திறந்துவைக்கப்பட்ட உள ஆரோக்கிய சிகிச்சை நிலையம் வார நாட்களில் திங்கள் ,வெள்ளி ஆகிய தினங்களில் காலை 08.மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை திறக்கப்படவுள்ளதாகவும் உளநல நோயாளிகள் இங்கு எவ்வித தங்கு தடையுமின்றி வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விரைவில் உளநல நோயாளிகளுக்கான விடுதி வசதிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment