இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையினால் புதிய காத்தான்குடி -03 அமீனா பள்ளிவாயலில் சிரமதானம்

unnamed (8)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்வின் வழிகாட்டலில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையினால் மனித நேயம் பேணும் சிரமதான நிகழ்வு புதிய காத்தான்குடி -03 அமீனா பள்ளிவாயலில் 13-12-2013 இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளை தொண்டர் இணைப்பாளர் சலீம் தலைமையில் இடம்பெற்ற இவ் சிரமதான நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அமீனா பள்ளிவாயல் உட்பட அதன் வளாகம் காத்தான்குடி செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களால் மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

குறித்த இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளை காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை தொடராக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment