கொழும்பு: இரண்டு கிலோ தங்கத்தை பெற்றுத் தருவதாகக் கூறி 100 இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 1ம் திகதி இந்த நிதி மோசடியில் இவர் ஈடுபட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையின் போது, இவர் அலுத்மாவத்தை, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. tk
Published by
![goldbar[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/goldbar1.jpg?w=150&h=105)
Leave a comment