புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் அதிபராக மௌலவி.எஸ்.ஏ.சீ.யாகூப் கடமையேற்கின்றார்

puttalam zahira– புத்தளம் ப்ரியன்

புத்தளம்: புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியில் தரம் 2 ஜக் கொண்ட அதிபராக எம்.றாசிக் பணியாற்றி வந்தார்.அண்மையில் கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட அதிபர் தரம் 1 ற்கான பரீட்சையில் மௌலவி யாகூப் சித்திபெற்றதையடுத்து அவருக்கு புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் அதிபருக்கான நியமனத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க வழங்கினார்.

இருந்தபோதும், தற்போதைய அதிபராக இருக்கும் எம்.றாசிக் அதனை புதிய நிர்வாகத்திடம் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து பாடசாலை அபிவிருத்தி சங்கம் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனஇமற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க ஆகியோரை கல்வி அமைச்சில் சந்தித்து இவ்விடயம் குறித்து  நேற்று புதன்கிழமை கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

தமது கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட கடிதத்திற்கமைய புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் அதிபராக எஸ்.ஏ.சீ.எம்.யாகூப் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கடமைகளை இன்று வியாழக்கிழமை அவரை பொறுப்பேற்குமாறு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக புத்தளத்தில் காணப்பட்ட இப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் ED/04/58/20/214/2013  என்ற இலக்க 2013.11.22 ஆம் திகதிய கடிதம் மூலம் அதிபர் பதவியினை ஏற்குமாறு எஸ்.ஏ.சீ.யாகூப்புக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment