காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2013 சர்வதேச சிறுவர் தின, முதியோர் வார விழா

DSC07015[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2013 சர்வதேச சிறுவர் தின, முதியோர் வார விழா 12-12-2013 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது 2013 சர்வதேச சிறுவர் தின நிகழ்வினை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் ,2013 சமூர்த்தி கெகுழு போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட அதிதிகளினால் பரிசும் ,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் சர்வதேச சிறுவர் தினம் முதியோர் வார பிறை சிறப்பு மலரின் முதற்பிரதி காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலினால் நிகழ்வின் பிரதம அதிதி காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பருக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன் நூல் நயவுரையை  காத்தான்குடி பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.முகம்மட் நளீம் (நளீமி) நிகழ்த்தினார்.
 
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்,கா-குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,பிரதேச கல்விப் பணிப்பாளர் சுபைர்,     கா-குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், கா-குடி பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாளர் ஈ.குணரட்ணம்,மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.குகதாசன்,கா-குடி பிரதேச செயலக கணக்காளர் றெஜினோல்ட்,பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.சுந்தரராஜா ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் சி.சக்திநாயகம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூர்த்தி முகாமையாளர் உட்பட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment