ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுக்கும் பாகிஸ்தான் தூதுவர் ஹாஸிம் ஹுரேசி இற்கும் இடையிலான சந்திப்பு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, உற்பத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுக்கும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜ ஜெனரல் ஹாஸிம் ஹுரேசி இற்கும் இடையிலான சந்திப்பு 10.12.2013 அன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் தூதுவராயலத்தில் இடம்பெற்றது.

பாகிஸ்தான் தூதுவரை தூதரகத்தில் சந்தித்த மாகாண அமைச்சர் கிழக்கு மாகாண அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் எதிர்கால திட்டங்கள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்தார். இச்சந்திப்பின் போது அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சமந்த அபேவிக்கிரம’ பாகிஸ்தான் தூதுவரின் செயளாலர் ஹஸன் ஸைஹாம் உட்பட மற்றும் பல அதிகாரிகளும்; கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் மக்களின் வாழ்வாதார உதவிகள், வறுமை ஒழிப்பு, சிறு கைத்தொழில் அபிவிருத்தி, விவசாயம், கால்நடை, மீன்பிடி, சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் கீழுள்ள வேலைத்திட்டங்களை தெளிவு படுத்தி கூறியதோடு எதிர்காலத்தில் பாகிஸ்தான் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிக முக்கியம் எனவும் இதற்கு பாகிஸ்தான் இத்திட்டத்திடகாக குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் தனது அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்களை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் இக்கலந்துரையாடலின் போது தூதுவரிடம் கேட்டுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் அமைச்சரினால் முன்னெடுத்து ஆரம்பிக்கப்பட்ட சிறு கைத்தொழில் பேட்டையினை நவீன முறையில் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி குறிப்பாக நவீன தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தலும்இ உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு உதவ வேண்டுமென வழியுறுத்திய அவர் மேலும் இதன் மூலம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற பல யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியுமெனவும் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மேலும் நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில்; அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள ஊக்கிவிப்பு சம்மந்தமான முதலீட்டுத் திட்டங்களின் மும்மொழிவுகளையும் பாகிஸ்தான் தூதுவரிடம் கையளித்தார். விரைவில் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்வேன் என்று அமைச்சரிடமும் இச்சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சு அதிகாரிகளிடமும் பாகிஸ்தான்; தூதுவர் உறுதியளித்ததோடு மிகக்கூடிய விரைவில் கிழக்குமாகாண மக்களின் வாழ்வாதரத்திட்டங்களுக்கும்இ கைத்தொழில் துறையின் அபிவிருத்திக்கும்;இ விவசாய துறையின் வளர்ச்சிக்குமஇ சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்கும் தங்களாளான சகல உதவியினையும் செய்துதரவுள்ளதாகவும் அமைச்சரிடம் அவர் தெரிவித்தார்.

ஏ.எம்.மஹ்சூம்

அமைச்சரின் ஊடக இணைப்பாளர். 

unnamed

Published by

Leave a comment